அ முதல் னௌ வரை.. அப்பாச்சி தீர்வு!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips 1
health tips 1

இளநரைக்கு…

வேம்பாளம் பட்டையை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் அந்த எண்ணெயை தலைக்குத் தடவி வர இளநரை

சீக்கிரத்தில் மறையும். வாரத்தில் இரண்டு நாள்கள் பசு வெண்ணெயை தலையில் தேய்த்து ஊறியவுடன் குளித்து அன்று கறிவேப்பிலைத் துவையல் செய்து
சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வர இளநரை போகும்.

இந்திரியம் வீணாகிறதா?

சில இளைஞர்களுக்கு உற்ற வயதில். கனவில் இந்திரியம் வெளிப்பட்டு வீணாவதுண்டு. இதனால் உடல் பலவீனமடையும். கொஞ்சம் துளசி விதையை எடுத்து சுத்தம் செய்து அதை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலையில் அம்மியில் வைத்து அரைத்து அரை ஆழாக்குப் பாலில் கலந்து வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட கனவில் விந்து வெளியாவது நின்று விடும்.

இடுப்பு வலியும் மூட்டு வலியும் நீங்க…

இடுப்பு வலி, கை கால் மூட்டுவலி போன்றவற்றிற்கு பொன்னிறமாய் வறுத்த கோதுமை மாவை ஓர் அவுன்ஸ் எடுத்துக்கொண்டு அதோடு
போதுமான அளவு தேன் சேர்த்துப் பிசைந்து காலை மாலை சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும்.

முருங்கைக் கீரையுடன் உப்பையும் சேர்த்து இடித்துச் சாறெடுத்து இடுப்பில் நன்றாகத் தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு விட்டுப்போகும். இரண்டொரு முறை தேய்த்தாலே நல்ல குணம் தெரியும்.

கடலையை ஊற வைத்து நன்றாக அரைத்து வெந்நீரில் கலந்து
வலியுள்ள மூட்டுகளின் மேல் பற்றுப் போட்டு வர மூட்டு வவி தீரும்

இரத்தப் பெருக்கு நிற்க…

வெட்டுக்காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தால் உடனே எலுமிச்சம் பழச்சாற்றை அந்தக் காயத்தின் மேல் பூசுங்கள். சிறிது எரியும். ஆனால், உடனே இரத்தப் போக்கு நின்று விடும்.

இரத்த வாந்தி நிற்க…

ஆலம் விதையும் அரச விதையும் சம அளவு சேர்த்து அரைத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட இரத்த வாந்தி உடனே நிற்கும்.

இருவாட்சிப் பூவை கஷாயம் வைத்து நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொள்ள வேண்டும். பழரசமும் கஞ்சியும் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடினமான பதார்த் தங்களை உண்ணக் கூடாது. இரண்டு நாள்களில் நல்ல குணம் தெரியும்.

இச்சையைத் தூண்ட..

சாதிக்காய்க்கு போக இச்சையைத் தூண்டக் கூடிய குணமுண்டு. ஆண்மைக் குறையுள்ளவர்களுக்கு சாதிக்காய் பயனுள்ளதாகும். குறைபாடில்லாதவர்கள் அதிபோகம் விரும்பி எந்த விதத்திலாவது இதைப் பயன்படுத்தி வந்தால் இது செயற்கைத் தூண்டியாக அமைந்து பின் நிர்ப்பந்தமாக உபயோகிக்கும் பழக்கத்தை உண்டு பண்ணி விடும்.

இழந்த ஆண்மையைத் திரும்பப் பெற…

கரமைதுனம், அதீத போகம் முதலியவற்றால் இழந்துவிட்ட ஆண் தன்மையை நெருஞ்சில் சமூலத்தின் மூலம் மீண்டும் பெறலாம். பூ. காய் ஆகியவற்றோடு கூடிய ஒரு நெருஞ்சிக் கொடியைக் கொண்டு வந்து அரைலிட்டர் வெள்ளாட்டுப் பாலில் ஆறு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி வேளைக்கு நாலு அவுன்ஸ் வீதம் தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

இன்பம் நீடிக்க…

அதிமதுரத்துடன் பசும்பாலும் வெண்ணெயும் தேனும் கலக்க நல்ல பலன் தரும். நன்றாக இடித்து தூள் செய்த அதி மதுரத்துடன் பாகுபதமாக வெண்ணெயும் தேனும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிமதுரத்தூள் ஒரு வேளைக்கு ஒரு தோலா எடுத்துக் கொள்ளலாம். போக காலத்திற்கு சுமார் 3 மணி நேரத்திற்கு முன் இதைச் சாப்பிட்டு அரை லிட்டர் பச்சைப் பசும்பாலைக் குடித்து விட்டுத் தாம்பத்திய உறவில் ஈடுபட இன்பமான சூழ்நிலை ஏற்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.