health tips - 2026

அப்பாச்சி தீர்வு: படுக்கை புண், பிரசவவலி, ஆசனவாய் அரிப்பு, கண்ணில் தூசி, முகப்பரு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

படுக்கைப் புண்ணா?

அடிக்கடி படுக்கை விரிப்பை மாற்றி புண் உள்ள இடங்களில் காற்றுப்படும் படி மாற்றி படுக்க வைக்க வேண்டும். கடுக்காயை இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி புண் மீது தடவி வர ஆறிவிடும்.

பிரசவத்திற்குப் பிறகு இடுப்பு வலியா?

இரும்புச் சத்துக் குறைவால் இந்த வலி ஏற்படுகிறது. நாவற்பழம். சீத்தாப்பழம், அன்னாசிப்பழம், அத்திப்பழம், தக்காளி, கோதுமை. பட்டாணி. கீரை வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குறையும்.

ஆசனவாயில் அரிப்பா?

மூலநோயின் காரணமாக ஆசனவாயில் அரிப்பு ஏற்படுவதுண்டு. கஞ்சாங்கோரை இலையை சிறிது ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் ஆசனவாயில் வைத்துக் கட்டினால் மூல நோயை உண்டாக்கும் பூச்சிகள் இறந்து விடும். ஆசன வாயின் அரிப்பும் நீங்கும்.

கண்ணில் தூசு விழுந்து விட்டதா?

கண்களை கசக்கக்கூடாது. துளி வெண்ணெயை எடுத்து கண்ணின் மேல் வைத்து ஒரு கட்டுப் போட்டுக் கொள்ளுங்கள். சிறிது நேரத்தில் தூசி வெளியாவதுடன் கண்ணும் பிரகாசமாக இருக்கும்.

முகப்பருவுக்கு…

சாதிக்காய். சந்தனம். மிளகு மூன்றையும் அரைத்து பருக்களின் மீது தடவி வர பருக்கள் மறையும். வெந்நீர் ஆவி பிடிப்பது நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.