health tips - 2026

அப்பாச்சி தீர்வு: குடல்வலி, உள்நாக்கு, தலைகரப்பான், உட்சூடு, வாதநோய்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

குடல் வலி குணமாக…

மாதுளம் பழத்தோலை உவர்த்தி தூள் செய்து காலை, மாலை கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர சில நாள்களில் குடல் வலி சரியாகும். குடல் இரைச்சலும் குணமாகும்.

உன் நாக்கு வளர்ந்து விட்டதா?

உள் நாக்கு வளர்ந்தால் மூன்று அவுன்ஸ் துளசிச் சாறும். மூன்று அவுன்ஸ் வில்வச் சானும் ஓர் ஆழாக்கு நல்லெண்ணெயும் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அந்த எண்ணெயை அரை தேக்கரண்டி வாயில் விட்டு தொண்டையில் படும்படி காலை, மாலை கொப்பளித்து வர உள்நாக்கு கருகிவிடும். உச்சந்தலைக்கு இதே எண்ணெயைத் தேய்த்துக் கொண்டால் மறுபடியும் உள்நாக்கு வளராது. டான்சில் ஏற்படாமலும் இது காக்கும். தொடர்ந்து ஏழு நாள்களாவது கொப்பளிக்க வேண்டும். தொண் டையில் சதை வளர்ந்தாலும் இதே எண்ணெயால் வாய் கொப்பளித்து வர குணமாகும்.

வாத நோய்கள் குணமாக…

திப்பிலியையும் கண்டந்திப்பிலியையும் சம அளவு எடுத்து தூள் செய்து நீர் விட்டு சுண்டக் காய்ச்சி வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் காலை, மாவை பருகி வர வாத நோய்கள் குணமாகும்.

மண்டைக் கரப்பானுக்கு…

தவையை மொட்டையடிக்க வேண்டும். ஆமணக்கு இலையில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் வதக்கி கரப்பான் மீது போட்டு துணியால் கட்டு போடவும். இரவில் போட்டு காலையில் கட்டை அவிழ்த்து கழுவி தேங்காய் எண்ணெய் தடவி வரவும். கரப்பானுக்கு உள்ளுக்கும் மருந்து சாப்பிடலாம். வசம்பு, பாவட்ட இலை. வெங்காயம், இலுப்பைப் பட்டை வகைக்கு 35 கிராம் எடுத்து நசுக்கி அரை விட்டர் விளக்கெண் ணெயில் போட்டு நன்கு காய்ச்சி இறக்கி ஆறவிட்டு வடிகட்டி காலை, மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர கரப்பான் ஒழியும்.

உட்சூடு தணிய…

ஒரு லிட்டர் நீரில் இருபது கிராம் செந்தாமரைப் பூவைப் போட்டுக் காய்ச்சி அரை விட்டராக சுண்டக் காய்ச்சி ஒரு பகுதியைப் பருக உடலிலுள்ள உட்சூடு தணியும். உடலுக்கும் மிகவும் நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.