ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் உயிரிழப்பு ! கொலையா ?

Published:

BlackSilhouette - 2026கர்நாடக மாநிலத்தின் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். 36 வயதாகிறது. இவர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்கு கல்யாணம் ஆகி நிகிதா என்ற மனைவியும் ஆர்ய கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். நிகிதாவுக்கு வயசு 28, குழந்தைக்கு வயது 4! இவரது தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா ஜாதகம் பார்க்கும் தொழில் செய்பவர். rooms - 2026இந்நிலையில் ஓம் பிரகாஷ், தனது அப்பா, அம்மா, மனைவி, குழந்தையுடன் மைசூர் – ஊட்டி சாலையில் குண்டுலு பேட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று அங்கேயே அறை எடுத்து தங்கி உள்ளனர். இன்று விடிகாலை ஹோட்டலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் பள்ளி அருகே 5 பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் சொன்னார்கள்.investigation 1 e1565949058649 - 2026சம்பவ இடத்திற்கு காவல்துறை சென்று பார்த்த போது 5 பேருமே உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தனர். இவர்களுக்கு அருகிலேயே துப்பாக்கி ஒன்றும் கிடந்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட காவல்துறையினர், விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஓம்பிரகாஷ் 4 பேரையும் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை  தொழில் பிரச்சனை மற்றும் கடன் பிரச்சனை காரணமாக இந்த கொலைகள் நடந்துள்ளதா? என தெரியவில்லை.  ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related articles

Recent articles

spot_img