குடி போதை ! நடை மேடை ! காரை ஏற்றி பெங்களூரில் பரபரப்பு ! வீடியோ காட்சிகள் !

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்

drunk and drive - 2026கர்நாடகத்தில் பெங்களூர் நகரில் எச் எஸ் ஆர் லேஅவுட் பகுதியில்  நடைபாதையில் ஒரு சிறிய பெட்டிக் கடையில் சிலர்,சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

இன்னும் சிலர் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்து நடைபாதை மீது ஏறியது.  இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.

பின்னர் நடைபாதையில் நின்றிருந்தவர்கள் மீது மோதிவிட்டு நின்றது. இதில் அந்த கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தோரும் நடந்து சென்றவர்களும் காயமடைந்தனர். அங்கு நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணும் இதில் அடங்குவார்.

இந்த விபத்தில் 6 முதல் 7 பேர் வரை காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்ததும் காரை வேகமாக இயக்கியதும் தெரியவந்ததுள்ளது. அவரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.