இந்தியா vs பாகிஸ்தான் ! காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் !

இந்தியா பொது தகவல்கள்

kasmir 2 - 2026பாகிஸ்தான் ராணுவம் தற்போது காஷ்மீர் எல்லையில் திடீர் என்று தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தற்போது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதில் இருந்து காஷ்மீர் எல்லையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. kasmir 1 1 - 2026ஒரு பக்கம் சீனாவும் அங்கு எல்லை மீறி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானும் இன்னொரு பக்கம் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். காஷ்மீர் எல்லையில் என்ன நடந்தாலும் நாங்கள் அதை எதிர்கொள்வோம். இந்தியாவிற்கு நாங்கள் திருப்பி பதில் தாக்குதல் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டது.ranuvam - 2026இந்த நிலையில்தான் பாகிஸ்தான் ராணுவம் தற்போது காஷ்மீர் எல்லையில் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. காஷ்மீரில் உள்ள பூன்ச் பகுதியிலிருந்து 11 கிமீ தூரத்தில் உள்ள கிருஷ்ன காதி என்ற பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காலை 11.30 மணிக்கு தொடங்கிய தாக்குதல் 3 மணி நேரமாக நீடித்து வருகிறது.

இதற்கு இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர்,சண்டை எப்போது முடியும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.