ரகசியமாய் ‘சிதம்பரம்’… வீட்டில் மீண்டும் சிபிஐ., அதிகாரிகள் தேடல்!

Published:

chidambaram residence1 - 2026

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வந்துள்ளனர். இன்று காலை வந்த அவர்கள், ப.சிதம்பரம் வீட்டில் இல்லை என்ற பின்னர் சுமார் அரை மணி நேரம் கழித்து திரும்பிச் சென்றனர்.

முன்னதாக, தில்லி உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுத்து விசாரித்து முன் ஜாமீன் முறையீடு செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றமும் அவசரவழக்காக விசாரிக்க முடியாது என்று கைவிரித்த நிலையில், ப.சிதம்பரம் வீட்டுக்குச் சென்ற சிபிஐ., அதிகாரிகள்,  தங்களது விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 மணி நேரம் கெடு விதித்து, அவரது வீட்டில் நோட்டிஸ் ஓட்டினர்.

ஆறு சிபிஐ., அதிகாரிகள் முதலில் சென்ற நிலையில், தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்று விசாரித்துள்ளனர்.

notice chidambaram house - 2026ஆனால் சிதம்பரம் அந்த நோட்டீஸில் கூறப் பட்ட படி, ஆஜராகாமல் தப்பித்து ஒளிந்து கொண்டதாகக் கூறப் படுகிறது. இதனால், விசாரணைக்கு ப.சிதம்பரம் ஆஜராகாத நிலையில் 3 அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு இன்று காலை வந்துள்ளனர்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

அப்போதும் அவர் வீட்டில் இல்லாததால், அரை மணி நேரம் கழித்து அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img