சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

rain in chennai - 2026

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் காலை முதல் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.

சென்னை தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட  சென்னை புற நகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று இரவும் பரவலாக மழை பெய்தது.

சென்னை கிண்டி, அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, சென்னை விமான நிலையம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.