கர்ப்பிணி பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை! வரதட்சணை கொடுமை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
suicide - 2026

டெல்லியில் கணவருடன் ஏற்பட்ட விரோதம் காரணமாக, கர்ப்பிணிப் பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ரோஹிணி செக்டார் -2 என்ற பகுதியைச் சேர்ந்த சங்கீதா இவருக்கு வயது 23 இவர் ஐந்து மாத கர்ப்பிணி. இவரது கணவர் கோவிந்த், அங்குள்ள தனியார் நிறுவன ஊழியர். இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின் போது, பெண்ணின் வீட்டார் வரதட்சணையாக பேசிய தொகையை கொடுக்கவில்லை என்பதால், கோவிந்த் அடிக்கடி மனைவியை துன்புறுத்தி, சண்டையிட்டு வந்துள்ளார். கர்ப்பிணி என்றும் பாராமல் நேற்று சங்கீதாவிடம், கணவர் கோவிந்த் சண்டையிட்டுள்ளார். இதனால், மனமுடைந்த சங்கீதா, அவர் வசிக்கும் கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி கூறும்போது, ‘தற்கொலை செய்துகொண்ட சங்கீதா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்னதாக, அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே சண்டை நடந்ததை உறுதி செய்த்துள்ளார்.

அவரது கணவர் கோவிந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.