ஆட்டோவ வேணா எடுத்துக்குங்க… 48 ஆயிரம் ரூவால்லாம் ஃபைன் கட்ட முடியாது!

இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி
odissa auto driver - 2026

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது பர்மிட் இல்லாமல் ஓட்டுநர் உரிமம் இல்லாத சுற்றுச் சூழல் மாசு உள்பட பல்வேறு சாலை விதிமீறல்கள் ஒடிசாவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு போலீசார் 47 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

ஒடிசாவில் சென்னையில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை அதிகப்படுத்தும் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

இதையடுத்து இந்தச் சட்டம் இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது! இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த ஆட்டோவை சோதனையிட்டனர்

odissa auto driver1 - 2026

அதன் ஓட்டுனர் மது அருந்தி இருப்பது தெரியவந்தது மேலும் அவரிடம் பர்மிட் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லை வாகனத்தின் சுற்றுச்சூழல் மாசும் சரிவர பராமரிக்கப்படவில்லை!

மேலும் வாகனத்தின் பதிவு மற்றும் தகுதி சான்றிதழ் சரியாக இல்லை காப்பீடு சான்றும் இல்லை இந்த அனைத்து விதிமீறல்களுக்கு போலீசார் 47 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர் !

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் என்னால் இவ்வளவு பெரிய தொகை செலுத்த முடியாது வாகனத்தை வேண்டுமானால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள் நான் சிறை செல்லவும் தயார் என்று கூறியுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.