தாயையும் 3 மாத சேயையும் எரித்து கொன்ற கொடூரம்! வரதட்சணைக் கொடுமை!

இந்தியா கிரைம் நியூஸ்
fire 5 - 2026

வரதட்சணைக்காக தாய் மற்றும் 3 மாத பெண் குழந்தை உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு!!

உத்தரபிரதேசத்தில் வரதட்சணைக்காக தாய் மற்றும் 3 மாத பெண் சிசுவும் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதுடைய பெண் ஷப்னம், பழ வியாபாரம் செய்துவரும் முகமது காசிம் என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து, ஷப்னத்திடம் முகமது காசிமும், அவரது தாயும் ரூ.2 லட்சம் வரதட்சணை பணம் கேட்டு நச்சரித்து உள்ளனர். வரதட்சணை கொடுக்கவில்லை என்பதால் அவரது மாமியார் அவரை அடித்து, உதைத்து கொடுமை செய்து வந்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, ஷப்னத்தின் சகோதரரான ஜாஹித் அலி ரூ. 1 லட்சம் ரொக்கப்பணத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளார். ஆனாலும், ஷப்னத்துக்கு எதிரான வரதட்சணை கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முகமது காசிமும், அவரது தாயாரும் சேர்ந்து ஷப்னம் மற்றும் அவரது 3 மாத பெண் குழந்தையை வீட்டிற்குள் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்தனர்.

எரித்த பின்னர் முகமது காசிமும் அவரது குடும்பத்தினர் 7 பேர் வீட்டிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று எரிக்கப்பட்ட உடல்களை மீட்டனர். முகமது காசிம் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் மீது காவல்துறையினர் கொலை மற்றும் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.