என்.ஆர்.சி., குறித்து பொய் பரப்பும் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிய பாஜக., புகார்!

Published:

police complaint against kejriwal and saurabh bharadwaj - 2026

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சௌரப் பரத்வாஜ் ஆகியோருக்கு எதிராக பாஜக தலைவர் கபில் மிஸ்ரா போலீஸில் புகார் அளித்துள்ளார்! அந்தப் புகாரில் என்.ஆர்.சி குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பொய்களை பரப்பியதாகத் தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவுரப் பரத்வாஜ் ஆகியோர் தில்லியில் என்.ஆர்.சி அமலாக்கம் தொடர்பாகவும், உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒப்பிடுவது குறித்தும் பொய்யான தகவல்களை பரப்பியுள்ளதாக மிஸ்ரா புகாரில் தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் தெரிந்தே தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) குறித்து பொய்யை ஊடகங்களில் பரப்பினார்! இதனால் பொதுமக்கள் என்.ஆர்.சி பற்றி அச்சத்துடன் இருப்பார்கள், இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு வழிவகுக்கும்.

தில்லியில் என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டால், தேசிய தலைநகரில் பணியில் வசிக்கும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் பீகார் ஆகிய பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள் தில்லியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் அவரது உதவியாளர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பரத்வாஜ் ஆகியோர் பொய்யான தகவல்களைப் பரப்பியுள்ளனர்.

மாநிலம் விட்டு மாநிலத்துக்கு தொழில் நிமித்தம் குடிபெயர்ந்த தொழிலாளர்களை, சட்டவிரோதமாக வேற்று நாடுகளில் இருந்து குடியேறியவர்களுடன் ஒப்பிடுவது, தில்லியை தங்கள் வீடாக மாற்றியவர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். தில்லியில் மக்கள் கோபமாக உள்ளனர், இது சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும். சட்டவிரோத ரோஹிங்கியாக்கள் மற்றும் பங்களாதேஷில் இருந்து குடியேறியவர்களைக் காப்பாற்றுவதற்கும், இந்த சட்டவிரோத குடியேறியவர்களை அடையாளம் காண முயற்சிக்கும் மத்திய அரசின் செயல்பாட்டில் தடைகளை உருவாக்குவதற்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சூழ்ச்சியாக உள்ளது இது என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

தில்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது வதந்திகளை பரப்பியமை, சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை உருவாக்க முயன்றது, சமூக ஊடகங்களில் பொய்களை பரப்பியது மற்றும் தேசிய தலைநகரில் பீகார் மற்றும் உத்தரபிரதேச குடியேறியவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக தில்லி போலீசில் வழக்கு பதிவு செய்யுமாறு அவர் கோரியுள்ளார்.

புதன்கிழமை, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊடக கேள்விக்கு பதிலளிக்கும் போது குடியுரிமை மற்றும் குடியிருப்பு பதிவேடு குறித்த தனது அறியாமையை வெளிப்படுத்தினார்.

தில்லியில் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சட்டவிரோத குடியேறியவர்கள் இங்கே இருப்பதால் தில்லியின் நிலைமை மோசமடைந்து வருகிறது என்று தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி சமீபத்தில் தெரிவித்திருந்தார். பாஜக அரசு அஸ்ஸாமில் செய்ததைப் போலவே தில்லியிலும் என்ஆர்சியை செயல்படுத்தவேண்டும் என்றார் திவாரி !

நாட்டில் வாழும் சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காண்பதில், என்.ஆர்.சி உதவுகிறது. இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு, வேறுபட்ட மாநிலங்களில் வாழும் இந்தியர்களை இலக்காகக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், சாமானியர்களை முட்டாளாக்க பெரும்பாலும் மலிவான தந்திரங்களை நாடிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகின்றனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

முன்னதாக, டில்லியில் தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை அமல்படுத்தினால், மாநில, பாஜக., தலைவர் மனோஜ் திவாரி தான், முதல் ஆளாக டில்லியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்,” என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்திருந்தார்.

வங்க தேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவி, அசாம் மாநிலத்தில், சட்டவிரோதமாக வசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக அண்மையில் தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த பதிவேட்டில், 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதால், நாடு முழுவதும் சர்ச்சைஎழுந்துள்ளது.

திவாரியின் பேச்சுக்கு பதிலளிப்பது போல், அரவிந்த் கேஜ்ரிவால் கூறிய போது, வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், நம் நாட்டுக்குள் ஊடுருவி, சட்டவிரோதமாக வசிப்பதை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது. தில்லியில், இந்த திட்டத்தை செயல்படுத்தினால், மனோஜ் திவாரி தான், முதலில், டில்லியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றார். கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img