இந்தா உனக்கு கிப்ட் வைச்சுருக்கேன்.. அழைத்தவன்.. சிறுமிக்கு செய்த கொடுமை!

இந்தியா கிரைம் நியூஸ்
vankodumai 1 1 - 2026

பரிசுத் தருவாகச் சொல்லி சிறுமியை அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்த லிப்ஃட் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லி அருகில் குர்கானில் அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்ட் பொறியாளராகப் பணியாற்றியவர் அருண் சர்மா (21). குடியிருப்பில் உள்ளவர்களிடம் நன்கு பழக்கமானவர் அருண் சர்மா, 14 வயது சிறுமியின் தாயிடம் நன்கு பழகி வந்துள்ளார். இதனால் சிறுமிக்கும் அவரை நன்றாகத் தெரியும். தாயிடம் பழகும் அங்கிள் என அவளும் சகஜமாக இருந்தாள்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை, லிப்ஃட் அருகே வந்த சிறுமியை அழைத்து ஏதோ , பரிசு தருவதாகக் கூறி மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார் அருண். அங்கு அந்த சிறுமியை மிரட்டி, பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தியுள்ளார். பின்னர் கருத்தடை மாத்திரை ஒன்றையும் வலுக்கட்டாயமாகச் சிறுமிக்கு கொடுத்துள்ளார். இதை யாரிடமும் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார்.

சிறுமி நடக்க முடியாமல் படியில் இறங்கியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அவரது தாயிடம் இதனைத் தெரிவித்தனர். அந்த சிறுமியின் தாய் விசாரித்தபோது, நடந்ததை தெரிவித்துள்ளார சிறுமி. அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களும் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர்.

சிறுமியின் தாய், குர்கான் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அருண் சர்மாவை கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.