”நான் முஸ்லீம்தான், எனது நாடு இந்தியா. இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்,” என்று குஷ்பு ட்விட்டில் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் குஷ்பு மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர். குஷ்புவின் இயற்பெயர் நகத் கான். ஆரம்பத்தில் இந்தியில் நடித்தார். இவரின் பெயரோ படமோ தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பின்பே பிரலமாயிற்று. தொடர்ந்து, படிப்படியாக, தமிழ்ப்பெண்ணாகவே மாறிவிட்டார் குஷ்பு, இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
குஷ்புவை சீண்டும் வகையில், ட்விட்டரில் சிலர் கருத்துகள் பதிவாகி வருகிறது. இதனால் தற்போது குஷ்பு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதற்காக தனது பெயரை Khushbu Sundar or Nakhat Khan for Sanghi fools என ட்விட்டரில் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
அந்த பதிவில், ”துரதிர்ஷ்டவசமாக எனது பெயரை நான் மாற்றிக் கொள்ள நேர்ந்தது. சில சங்கி ஊமை குசும்பன்கள் (முட்டாள்கள்) என்னை பற்றி அடிப்படை உண்மை தெரியாமல் பேசுகிறார்கள். அவர்கள் என்னை முஸ்லீம் எனக் கூறி, என் நாடான இந்தியாவை விட்டு வெளியேற சொல்கின்றனர். அவர்களுக்க ஒன்றை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். ஆமாம், நான் ஒரு கான். நான் ஒரு முஸ்லீம்.
இந்தியா என் நாடுதான்..இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?,” என குஷ்பு கேட்டுள்ளார். இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.
Sadly once again I have to edit my profile.Sanghi dumb idiots are so physically retarded that they do not understand simple basics..they are calling me a Muslim who does not have a place in my country, my INDIA. YES I AM A KHAN,I AM A MUSLIM AND INDIA IS MY COUNTRY..Koi shaq?❤
— KhushbuSundar or NakhatKhan for sanghi fools❤️❤️❤️ (@khushsundar) September 25, 2019