காதலிக்க மறுத்த காதலி! தீ வைத்து எரித்த காதலர்!

இந்தியா கிரைம் நியூஸ்
lovefire - 2026

ஒருதலைபட்சமாக காதலித்து வந்த பெண்ணை காதலர் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்னும் பகுதியில் இங்கு நிதின் என்பவர் வசித்து வந்தார். எர்ணாகுளத்தில் அருகே உள்ள காக்கநாடு என்னும் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை நிதின் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தார்.

நிதின் தன்னுடைய காதலை அந்தப் பெண்ணிற்கு பலவழிகளில் சொல்லியும் அந்த பெண் ஏற்றுக் கொள்ளவில்லை, இதனால் நிதின் கடுமையான கோபமும் விரக்தியும் ஆற்றாமையும் அடைந்தார்.

தன் காதலை அந்த பெண் புரிந்து கொள்ளாததால் அவரை கொலை செய்யத் திட்டமிட்டார். காதல் வெறியானது. சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் நிதின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அந்த பெண் மீது ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்.

fire 1 - 2026

பின்னர் தன் மீதும் ஊற்றி தீக்குளித்துள்ளார். மகளின் அலறல் சத்தத்தை கேட்டு அலறி அடித்து வந்த தந்தை அவரை காப்பாற்ற எவ்வளவோ முயன்றார். ஆனால் அவரால் இயலவில்லை. தற்போது உடல் முழுவதும் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.