தேவைப்பட்டால் சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கலாம்: அமலாக்கத் துறைக்கு அனுமதி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
chidambaram behind bars - 2026

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை காவல் அனுமதிக்கப்பட்டுள்ளது

காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி.

தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியங்களை கலைக்கமாட்டார் எனக் கூற முடியாது என யூகத்தின் அடிப்படையில் தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது என்று அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்

சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் என்றால், சாட்சியங்களை பாதுகாக்க சிபிஐ என்ன செய்தது? ஜாமீன் வழங்க கூடாது என்பதற்காகவே, சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் எனக் கூறப்படுகிறது என்று அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்

chidamabaram court - 2026

ப.சிதம்பரத்தை சிபிஐ அடர்ந்த வனத்தில் வைத்து கைது செய்யவில்லை, மாறாக அவரது வீட்டில் வைத்துதான் கைது செய்தது என்று அபிஷேக் மனு சிங்வி நீதிமன்றத்தில் தெரிவித்தார்

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது

இதை அடுத்து ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

Chidambaram - 2026

விசாரணைக்கு பிறகு தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்வது குறித்து அமலாக்கத்துறை முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது

தில்லி திகார் சிறையில் நாளை 30 நிமிடங்கள் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் விசாரணை முடிவில் பல சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.