பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதலைத் தொடங்கியது இந்திய ராணுவம்!

Published:

army attack - 2026

எல்லையில் இந்தியா தாக்குதலை துவக்கியது! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடும் தாக்குதல் தொடங்கியுள்ளது. காஷ்மீர் தாங்தார் எல்லை அருகே பாக். பயங்கரவாத முகாம்கள் மீது பீரங்கிகள் மூலம் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது! எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (கட்டுப்பாடு) வழியாக, பயங்கரவாதிகளை கடக்க பாகிஸ்தான் உதவி புரிந்ததை அடுத்து, இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை மீறும் முயற்சியில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதல், தங்தார் செக்டாரில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, இந்திய இராணுவம் தனது பீரங்கித் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தாக்கி வருகிறது! பாகிஸ்தான் ராணுவம், தங்களது ஜிஹாதி பயங்கரவாதிகளை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தாங்கள் முறைகேடாக ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து அனுப்ப தீவிரமாக முயன்று வருகிறது.

பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது. முன்னதாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிர் தியாகம் செய்தனர்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

எல்லையையொட்டிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

எல்லை அருகே பாகிஸ்தானில் பயங்கரவாதிகள், 20 முகாம்கள் அமைத்து, இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக, உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. இந்த தீவிரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவி வருவதாகவும் உளவுத்துறை கூறியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம், காஷ்மீரை ஒட்டி அமைந்துள்ள எல்லைப் பகுதியில், துருப்புகளை அதிகரித்திருப்பதோடு, கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில், இந்திய துருப்புகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் டாங்தார் மண்டலத்திற்குட்பட்ட குப்வாரா பகுதியில், இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில், ராணுவ நிலைகளுக்கு அருகில் இருந்த இரண்டு வீடுகள் பலத்த சேதத்தை எதிர்கொண்டன. இந்த சம்பவத்தில், குப்வாரா பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்திருப்பதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

பாகிஸ்தானின் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் பாகிஸ்தான் தரப்பில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img