பசுவின் வயிற்றுக்குள் ப்ளாஸ்டிக் கழிவுகள்! அதிர்ந்த மருத்துவர்!

Published:

cow - 2026

சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் இவர் அவரது வீட்டில் பசு மாடு வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வந்த மாடு சில நாட்களாக சிறுநீர் மற்றும் சாணம் கழிக்காமல் சிரமப்பட்டு வந்துள்ளது.

இதனால் முனிரத்தினம் அவரது மாட்டினை அருகில் இருந்த கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று வைத்தியம் பார்த்துள்ளார். அதனைப்பார்த்த மருத்துவர் வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

cow 2 - 2026

முனிரத்தினம் அவரது பசுவை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பசுவை ஸ்கேன் செய்து பார்த்தபோது பசுவின் வயிற்றில் கழிவுப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர் மருத்துவர்கள், அந்த பசுவிற்கு சுமார் ஐந்தரை மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பசுவின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

cow 1 - 2026

வெளியில் அகற்றப்பட்ட அந்த கழிவு அது சுமார் 52 கிலோ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஆடு, மாடு போன்ற விலங்கினங்கள் உணவாக உண்பது புல், மரத்தழைகள் தான். ஆனால் அந்த நிலை மாறி பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் அவலநிலை உறவாகியுள்ளது. இதனால் தான் பசுவின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கிலோ கணக்கில் அகற்றப்பட்டது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img