ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு தாக்கல்!

Published:

chidambaram tihr - 2026

சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்ற நிலையில், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் ப.சிதம்பரம்.

தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், ப.சிதம்பரம் தற்போது, அமலாக்கத் துறை காவலில் இருக்கிறார், ப.சிதம்பரம்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து, இந்த வழக்கில் பழைய நம்பிக்கை பெற்றுள்ள ப.சிதம்பரம், அமலாக்கத்துறை காவலில் இருந்தும் ஜாமீனில் வெளியே வரலாம் என்று நினைக்கிறார்.

இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறையில் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் சிதம்பரம், ஜாமின் கேட்டு தில்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தை அக்.24 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img