மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஜெர்மனி முழு ஆதரவு அளிக்கும்: பிரதமர் மெர்கல்!

இந்தியா பொது தகவல்கள்
modi jermani - 2026

இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் மெர்கலுக்கு டில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பிரதமர் மோடியுடன் சில நிமிடங்கள் ஆலோசித்தார்.

இதனையடுத்து இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது: இன்று இந்தியா, ஜெர்மன் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகள் இடையே வர்த்தகம் பெருகி உள்ளது. மெர்கல் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறார். அவரை மகிழ்வோடு வரவேற்கிறேன். இதற்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தொழில்நுட்ப முன்னேற்றம், பயங்கரவாத ஒழிப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துளோம். வெளியுறவு துறையில் ஒத்துழைப்பு, முதலீடு பெருக்கம் ஆகியவற்றில் ஜெர்மன் முழு உதவி செய்வதாக கூறியுள்ளது.இது இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உதவும் என்றார்.

modi jeman - 2026

மெர்கல் கூறியதாவது: இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றம், இந்தியாவில் தனியார் துறையில் முதலீடு ஆகியன குறித்து விவாதித்தோம். முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளோம். மேக் இன் இந்தியா திட்டம் வரவேற்க கூடியது.

இந்த திட்டத்திற்கு ஜெர்மனி முழு ஆதரவு அளிக்கும். மேக் இன் இந்தியா திட்டத்தில் ஜெர்மனி பங்குபெறும்.இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் நல்ல வளம் உள்ளது. ஜெர்மனியில் இந்தியாவின் 20 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர்.

கல்வி மற்றும் அறிவியல் துறையில் இரு நாடுகளும் புதிய கண்டுபிடிப்புகளை அறிய வேண்டும். எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் வளர்ச்சி மிக முக்கியமானது. இவ்வாறு மெர்கல் கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.