andhra speaker - 2026

சந்திரபாபுவின் வண்டவாளத்தை எல்லாம் வெளிப்படுத்துவோம்; மக்கள் முன்னால் நிற்க வைத்து அவருடைய துணிகளை அவிழ்ப்போம் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ஆந்திர மாநில சபாநாயகர் தம்மினேனி சீதாராம்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திரா சபாநாயகர் தம்மினேனி சீதாராம் மிகக் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசினார். அக்ரிகோல்டு விஷயத்தில் கடந்த அரசு மோசடியில் ஈடுபட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஹாய்லேண்டு நிலங்களை கையகப்படுத்துவதற்கு சந்திரபாபுவும் லோகேஷும் திட்டமிட்டார்கள் என்றும், அக்ரி கோல்டோடு தனக்கு தொடர்பு இல்லை என்று சந்திரபாபு அறிவிப்பாரா என்றும் சவால் விட்டார் தம்மினேனி சீதாராம்!

சந்திரபாபுவின் வண்டவாளத்தை எல்லாம் வெளிப்படுத்துவோம் என்றும், அவரை மக்கள் முன்னால் நிற்க வைத்து அவருடைய துணிகளை அவிழ்ப்போம் என்றும் மிகக் கடுமையான வாசகங்களையும் மொழிந்தார்.

தனக்கு எத்தனையோ அனுபவம் உண்டு என்று கூறிக் கொள்ளும் சந்திரபாபு, அந்த அனுபவங்களை மடித்து வேறெங்காவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

தேர்தலின் முன்பு ரூ.10,000 கொடுப்பேன் என்று கூறி அனைவரிடமிருந்தும் பெயர் கூட பதிவு செய்துகொண்டு, பின்னர் அவர் எதுவும் தரவில்லை என்று குற்றம் சாட்டினார். அரசாங்கமே ஊழல்களில் ஈடுபட்டால் மக்களின் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.

கண் முன்பே அநியாயம் நடக்கையில் சபாநாயகர் தட்டிக் கேட்க கூடாதா என்றார். தாம் முதலில் ஒரு எம்எல்ஏ என்றும் அடுத்துதான் தாம் சபாநாயகர் என்றும் கூறினார் தம்மினேனி சீதாராம்.

சந்திரபாபு ஒவ்வொன்றையும் மாயம் செய்து விடுபவர்; அவர் பெரிய மோசக்காரர் என்று விமர்சித்தார். ‘யனமுல’ ராமகிருஷ்ணுடு, சியெம் ரமேஷ் முதலானோர் அக்ரிகோல்டு சொத்துகளை விழுங்குவதற்கு முயற்சித்தார்கள் என்றும் தம்பினேனி குற்றம் சுமத்தினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending