ரஃபேல் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி!

Published:

rafale deal modi rahul - 2026

ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப் படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ரஃபேல் ஒப்பந்தம் செல்லுமா என்பது குறித்த, மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப் பட்ட மறு சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன.

இதை அடுத்து ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவு நீடிக்கிறது.

முன்னதாக, பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க ரூ.58 ஆயிரம் கோடி ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. 2016ஆம் ஆண்டு ஜன. 26ம் தேதி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்பந்தம் போட்டது.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுக்களை 2018 டிச.14ல் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.இந்நிலையில், ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

இந்த சீராய்வு மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப் பட்டுள்ளன.

Related articles

Recent articles

spot_img