இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டை மீண்டும் ஒரு முறை பெருமை அடையச் செய்துள்ளனர்: மோடி!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம்
MODI - 2026

கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டை மீண்டும் ஒருமுறை பெருமை அடைய செய்துள்ளனர் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் வாழ்த்தியுள்ளார்.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கார்டோசாட் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் நாட்டின் எல்லைப் பகுதிகளை துல்லியமாக புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.

இந்த கார்டோசாட் – 3 செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. – சி47 ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைகோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு ஆய்வுகளுக்கு உதவுவதற்காக ‘கார்டோசாட் – 3’ செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

13 செயற்கைக் கோள்களைச் சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. – சி46 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9:33க்கு விண்ணில் பாய்ந்தது.

1,625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து 509 கி.மீ., தொலைவில் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது! இந்த செயற்கைக்கோள் 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும்.

கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்! இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டை மீண்டும் ஒருமுறை பெருமை அடைய செய்துள்ளனர் என்று பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.