செங்கோட்டை ரயில்நிலைய பராமரிப்புக்கு தென்னக பொதுமேலாளா் பாராட்டு.!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை பொது தகவல்கள்
sct rs - 2026

செங்கோட்டையில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஜான்தாமஸ் ஆய்வு.!

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் மதுரை மண்டலத்தின் ரயில்வே பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்க்கொண்டு வருகிறார்.

செங்கோட்டை விருதுநகர் பகுதிகளை ஆய்வு செய்த அவர் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்தார்.

ரயில் நிலையத்திற்கு வருகை தந்த அவருக்கு செங்கோட்டை ரயில்வே தொழிலாளா்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் செங்கோட்டை ரயில்வே பணியாளா்கள் சங்கம், இரயில் பயணியா் நலச்சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகா்கள் உள்பட பலா் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா். அதனைதொடா்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
செய்தியாளா்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது.

sct rs 2 - 2026

 பாரத பிரதமரின் தொலை நோக்கு திட்டத்தால் விருதுநகர்- கொல்லம் உட்பட நாட்டின் அனைத்து ரயில் தடங்களும் 2022க்குள் மின் மயமாக்கப்படும்

 ரயில் பயணிகளின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது.

அத்துடன் பயணிகளின் கூடுதல் வசதிக்கும், பாதுகாப்பிற்கும் தென்னக ரயில்வே முக்கியதுவம் கொடுத்து வருகிறது.

.அந்த வகையில் தற்போது மதுரை மண்டல பகுதிகளை ஆய்வு செய்து வருகிறேன்.

 இன்று விருதுநகர் செங்கோட்டை பகுதிகளை ஆய்வு செய்தேன்.

sct rs 3 - 2026

இந்த பகுதிகளில் உள்ள இரயில் நிலையங்கள் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

 தென்னக ரயில் பயணிகள் வசதிக்காக படிபடியாக பொது மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.

 பயணிகளின் நலன்,வசதி, தான் முக்கியமாக கருதப்படுகிறது. சென்னை முதல் கொல்லம் வரை சுற்றுலா ரயில் இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

ஆலங்குளம் வழியாக நெல்லைக்கு புதிய ரயில் பாதைக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்கும் பட்சத்தில் அதற்கான பணிகள் துவங்க இருக்கிறது.

 அதற்கு இடம் கையகப்படுத்துவது தாமதமாகி வருகிறது.

பல்வேறு ரயில்வே பணிகளுக்காக இந்தியா முழுவதிலும் இடம் கையப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது.

sct rs 4 - 2026

பயணிகள் வசதிக்காக மேம்பாட்டிற்கான பணிகள், சிறப்பாக நடந்து வருகிறது.

 பேட்டியின் போது மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின் உட்பட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக இரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் அளிக்கப்பட்டது.

 நிகழ்ச்சியில் இரயில் பயணிகள் சங்க தலைவர் பொறியாளா் முரளி, செயலாளா் கிருஷ்ணன், சுந்தரம், பிஆர்ஒ.ராமன், மற்றும் நிர்வாகிகள், வர்த்தக சங்க நிா்வாகிகள் செல்வகணபதி, சதீஷ்(எ)லெட்சுமணன்,  பாஜக நகரத்தலைவா் மாரியப்பன், செயலாளா் சீனிவாசன் தென்னக ரயில்வே மஸ்துார் யூனியன் சங்க செயலாளா் சாபு மற்றும் நிர்வாகிகள்,முன்னாள் செயலாளா் கல்யாணிபாண்டியன், நகர சிபிஎம் நிர்வாகிகள் முத்துசாமி, கசமுத்து, திமுக நிர்வாகி மாநில பேச்சாளா் குத்தாலிங்கம், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட சிறுபான்மை பிரவு துணைச்செயலாளா் மன்சூர் மற்றும் சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.