குற்றவாளிகளுக்கு விரைவான தூக்கு தண்டனையைத் தான் விரும்பினோம்!

Published:

rekha sharma - 2026

குற்றவாளிகளுக்கு விரைவான தூக்கு தண்டனையைத் தான் விரும்பினோம்… என்று கூறியுள்ளார் தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா.

தெலங்கானா பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், சாதாரண பிரஜை என்ற அடிப்படையில், என்கவுன்டர் சம்பவம் மகிழ்ச்சியை தருகிறது. இதனை தான் அனைவரும் விரும்பினோம்.

ஆனால், இது சட்டப்படியாகவும், முறையாகவும் இது நடைபெற வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றுதான் விரும்பினோம்.

இங்கு போலீஸ் சிறந்த நீதிபதிகளாக உள்ளனர். என்ன சூழ்நிலையில் என்கவுன்டர் நடந்தது என்பது தெரியவில்லை என்று கூறினார்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Related articles

Recent articles

spot_img