என்கவுண்டர் விவகாரத்தில்… தெலங்கானா முதல்வரை ‘ஓவராக’ப் புகழ்ந்த ஜெகன்!

Published:

jaganmohan - 2026

கேசிஆர் திடமுள்ள முதல்வர் என்று ஆந்திர மாநில சட்டமன்றத்தில் முதல்வர் ஜெகன் மோகன் புகழ்ந்துரைத்தார்.

ஆந்திர சட்டமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் தெலங்காணா அரசாங்கத்தை பாராட்டினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. தெலங்காணா போலீசாரை கூட ஜெகன் மெச்சிக் கொண்டார்.

குறிப்பாக, தெலங்காணா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மீது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புகழ் மழை பொழிந்தார்.

கேசிஆர் திடமுள்ள தீர்மானம் எடுத்துள்ளார் என்றார்.
“அசெம்பிளி சாட்சியாக தெலங்காணா அரசை பாராட்டு கிறேன். தெலங்காணா போலீசாரையும் மெச்சுகிறேன். குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தால்….. NHRC எதற்காக வந்து விசாரணை செய்கிறது? என்று வினா எழுப்பினார்.

தில்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை என்றார். பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக கடினமான சட்டங்கள் எடுத்து வரவேண்டிய தேவையுள்ளது என்றார் முதல்வர் ஜகன்.

“சோசியல் மீடியாவில் தரக்குறைவான பதிவுகள் போட்டால் கடினமான நடவடிக்கை எடுப்போம். மது அருந்துவதால் தான் மனிதர்கள் மிருகங்களாக மாறுகிறார்கள். அதனால்தான் பர்மிட் ரூம், பெல்ட் ஷாப்களை ரத்து செய்து விட்டோம்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

நீடிமன்றங்களில் வழக்குகள் விசாரணை தாமதமாகக் கூடாது. பெண்களின் மீது பாலியல் தாக்குதல்கள் செய்தால் 21 நாட்களுக்குள் தண்டனை கிடைக்கும்படி சட்டங்கள் எடுத்து வர வேண்டும்.

இன்று திசா கொலையாளிகளின் என்கவுண்டர் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கை நன்றாக இல்லை. சட்டங்களை மாற்றினால் பெண்கள் மீது தாக்குதல்கள் குறையும் வாய்ப்புண்டு” என்றார் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img