
சவூதி அரேபியாவில் வாழும் பெண்களுக்கு அந்நாட்டு அரசு கடும் கட்டுபாடுகள் விதித்துள்ளன.
இந்நிலையில் இளவரசர் முகமது பின் சல்மான் பதவியேற்ற பிறகு அந்நாட்டு பெண்களுக்காக நடைமுறையில் இருக்கும் பல கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு பெண்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போதைக்கு சவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆன் -பெண் என தனித்தனியாக நுழைவாயில் வைக்க வேண்டும் என அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வெவ்வேறு நுழைவாயில் என்னும் நடைமுறை முடிவுக்கு வந்து ஆண்கள் பெண்கள் இருபாலரும் பொது வழியை பயன்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது.

உணவகங்களுக்குள்ளே ஆண்கள் மட்டும் அமரும் பகுதியும், பெண்கள் மற்றும் குடும்பமாக வருபவர்கள் பகுதியும் பிரிக்கப்பட்டு திரைச்சீலை கொண்டு மறைக்கப்பட்டிருக்கும்.
இது போன்ற நடைமுறைகள் தற்போது தளர்ந்து வருகிறது.
மேலும் உணவகத்திற்குள் பிரிக்கப்பட்டிருக்கும் இருக்கை பகுதிகளும் அகற்ற படும் என்பதை பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்கு முன்பு சவூதி அரேபியா பெண்கள் பள்ளிகளில் விளையாடுவதற்கு அனுமதி இல்லை என்னும் நிலை இருந்தது,
தற்போது பெண்கள் விளையாடலாம் என சவூதி அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.



