முத்தலாக்: மகனுக்கு மணமுடிக்கவே மருமகளோடு உறவு கொண்டேன்! மாமனார் விளக்கம்!

Published:

vankodumai 1 1 - 2026

பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

25 வயது இளம்பெண் ஒருவரை அவரது மாமனாரே கதற கதற பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தையே அதிர செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சோலங்கி எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த இளம் ஜோடியினருக்குள் கடந்த சில நாட்களாக பிரச்சனை எழுந்துள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணின் கணவன், திடீரென தன்னுடைய மனைவியிடம் மூன்று முறை முத்தலாக் சொல்லி விட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

இந்த சமயத்திற்கு காத்திருந்ததைப் போல, மகன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும், அந்த பெண்ணின் மாமனார், மருமகளை அறைக்குள் தள்ளி விட்டு, துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

muthalak - 2026

அதன் பிறகு அவரிடம் இருந்து தப்பிய மருமகள், காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மற்றும் முத்தலாக் சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்கார வழக்கைப் பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இதுகுறித்த விசாரணையில் முஸ்லீம் சட்டப்படி ஒரு பெண்ணை முத்தலாக் சொல்லி கணவன் பிரிந்து விட்டால் மீண்டும் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து அவருடன் உறவில் இருந்து முத்தலாக் பெற்றால் மட்டுமே மீண்டும் அதே கணவனை திருமணம் செய்து கொள்ள முடியுமாம்.

kaithu - 2026

அதனால் தனது மகனுக்கு மீண்டும் இதே பெண்ணை மணமுடிக்க வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்ததாக மாமனார் கூற காவல்துறையினர் மேலும் அதிர்ந்தனர்.

வில்லங்க மாமனாரின் இந்த விளக்கத்தைக் கேட்ட காவல்துறையினர், இந்த கற்பழிப்பு வழக்கில், மகனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்தலாக் சம்பவத்தால் இப்படி எல்லாம் நடக்குமா என்று பலரும் அதிர்ச்சியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img