அடுத்த வருஷத்தை எழுதும் போது அஜாக்கிரதையா இருந்தா அவ்வளவு தான்!

Published:

2020 - 2026

அடுத்த வருஷத்தை எழுதும் போது அஜாக்கிரதையா இருந்தீங்கன்னா அவ்வளவு தான்

2019ம் வருடம் முடிவடைய இருக்கிறது. புது வருஷத்தை வரவேற்க பலரும் ஆவலாக உள்ள நிலையில். ஒரு முக்கியமான விஷயத்தை இந்த ஆண்டில் ஞாபகம் வைத்து கொள்ளணும்.

பழக்க தோஷத்துல வர்ற 2020ம் ஆண்டு புது வருஷத்துல தேதியை எழுதும் போது 1.1.20 என்று எழுதாதீங்க. உஷாரா இருந்துக்கோங்க. அப்படி நீங்க எப்பவும் போல 1.1.20ன்னு வருஷம் முழுக்க தேதியை பழையபடியே சோம்பேறித்தனத்தோட எழுதுனீங்கன்னா.. அதன் பிறகு அதை ரொம்ப ஈஸியா யார் வேணும்னாலும் திருத்திக் கொள்ளலாம்.

அதனால் தான் வரவிருக்கும் 2020ம் ஆண்டில் ஒரு தேதியை எழுதும் போது, ​​அதை அதன் முழு வடிவத்தில் எழுத வேண்டும் என்பதில் கவனம் தேவை என்கிறோம். உதாரணத்துக்கு 01/01/2020 மற்றும் 31/01/20. இதில் நிச்சயமா 31/01/20 என்று எழுதக் கூடாது.

ஏனெனில், அப்படி எழுதுனா யார் வேணும்னாலும் அதை சுலபமாக 31/01/2000 என்றோ அல்லது 31/01/2019 என்றோ அல்லது அவங்களோட வசதிக்காக அதை எந்த வருஷத்துக்கு வேணும்னாலும் மாற்றலாம். கடைசி இரண்டு இலக்கங்களை சேர்ப்பதன் மூலம் அப்படி சுலபமா மாற்ற முடியும்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இந்த 2020 ஆண்டு மட்டுமே இந்த சிக்கல் இருக்கும். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். எந்த ஆவணங்களையும் பெறும் போதும் ஆண்டினை 2020 என எழுதவும். இந்த தகவல் வாட்ஸ்ஆப்பிலும் வேகமாக பர்வி வருகிறது.

Related articles

Recent articles

spot_img