மாமியாருக்கு தெரிய வந்த கள்ளக் காதல்! பாம்பை விட்டுக் கொன்ற மருமகள்!

இந்தியா கிரைம் நியூஸ்
jaipur - 2026

ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டம் ஒரு கிராமத்தில் சச்னி – அல்பனா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 2018-ம் வருஷம் கல்யாணம் ஆனது.

சச்சின் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். கல்யாணம் ஆன சில நாட்களில் பணிக்கு கிளம்பி சென்றுவிட்டார். அதனால், அல்பனாவும் சச்சினின் அம்மா சுபோத் தேவியும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அல்பனாவுக்கு அதேபகுதியை சேர்ந்த மணீஷ் என்பவருடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.. அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருந்தனர்.. மேலும் நிறைய இடங்களுக்கு சென்று இருவரும் இருந்து விட்டும் வந்துள்ளனர்.

இந்த விஷயம் மாமியாருக்கு தெரிந்துவிட்டது. அதனால் அல்பனாவை கண்டித்தார். ஆனால் கள்ளக்காதலை பிரிக்கவே முடியவில்லை. தொடர்ந்து அட்வைஸ் பண்ணி கொண்டே இருந்த மாமியாரை கண்டு அல்பனாவுக்கு எரிச்சலாக இருந்தது. அதனால் மாமியாரை கொலை செய்யலாம் என்று முடிவு செய்தார். இதற்கான ஐடியாவை கள்ளக்காதலனிடம் கேட்டார்.

snake - 2026

நாம சேர்ந்து கொன்றால் மாட்டிக் கொள்வோம். அதனால் பாம்பை விட்டு மாமியாரை கடிக்க வைத்து கொன்றுவிடலாம். நம்ம மேல சந்தேகம் வராது. பாம்பு கடித்து இறந்துவிட்டதாக நம்ப வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

இதற்காக கடந்த ஜுன் மாதம் 2-ம் தேதி ஒரு விஷப்பாம்பை வரவழைத்து கொண்டு வந்தனர். மாமியார் வீட்டிற்குள் தனியாக இருந்தபோது, பாம்பை உள்ளே விட்டனர். அதன்படியே அந்த பாம்பு மாமியாரை கொத்தி கொன்று விட்டது.

மாமியார் இறந்த பிறகு அல்பனாவுக்கு ஒரே குஷி. வழக்கத்துக்கு மாறாக சந்தோஷத்தில் குதித்து கொண்டிருந்தார். இதை பார்த்த உறவினர்களுக்கு டவுட் வந்துவிட்டது.

மாமியார் இறந்த அடுத்த சில தினங்களிலேயே அல்பனாவின் நடவடிக்கை குறித்து காவல்துறையினர் புகார் தந்தனர். மேலும் கள்ளக்காதலன் மணீஷின் பற்றி எசகுபிசகாக கேள்விப்பட்ட தகவல்களையும், மணீஷின் போன் நம்பரையும் தந்தனர்.

தன்னுடைய கள்ளக்காதல் விவகாரம் மாமியாருக்கு தெரிந்துவிட்டது. அதனால் மாமியாரை கொன்ற மருமகள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.