சுரேஷ் முதல் வில்சன் கொலை வரை! ‘ஜிஹாதி’ கரங்களை முடக்காததால்… தொடரும் வினை!

Published:

ssi shotmurder - 2026

சென்னையில் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமாரைப் படுகொலை செய்தது முதல் வில்சன் எனும் எஸ்.எஸ்.ஐ., படுகொலை செய்யப் பட்டது வரை தொடரும் ஜிஹாதிகளின் படுகொலையை கண்டிக்காமலும், ஆதரவளித்தும் பேசும் திமுக., உள்ளிட்ட தமிழகத்தின் நாசகார அரசியல் சமூக இயக்கங்களின் செயல்பாடுகளால் இன்னும் எத்தனை உயிர்கள் ஜிஹாதுக்கு இரையாகப் போகின்றனவோ என்று அச்சத்துடன் கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்!

இன்று எஸ்.எஸ்.ஐ., வில்சன் படுகொலையில் தொடர்புடைய இருவரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் கர்நாடக மாநில போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, நேற்று, இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு பயங்கரவாதியை பெங்களூரில் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்!

சென்னை அம்பத்தூரை அடுத்த மண்ணூர்பேட்டைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமாரை கடந்த 2014ஆம் வருடம் இஸ்லாமிய அடிப்படை வாத இயக்கங்களைச் சேர்ந்த நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

விசாரணையில் சென்னை, கடலூர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இவரை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சுரேஷ்குமார் கொலைக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் சையது அலி நவாஸ், அப்துல் சலீம், காஜாமைதீன் ஆகியோர் சமீபத்தில் தில்லியில் கைது செய்யப்பட்டனர்.

kanyakumari police - 2026

இவர்கள் ஜிகாத் பெயரில் தமிழகத்தில் இந்து தலைவர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளது தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் பெங்களூரில் இளநீர் வியாபாரிகள், சலவைத் தொழிலாளிகள் போல் தங்கியிருந்த ஜிகாத் அமைப்பைச் சேர்ந்த முகமது கனிஃப் கான் (23) இம்ரான்கான் (32), முகமது ஜெகித் (24) ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

suresh padi - 2026
padi suresh

இந்நிலையில் பெங்களூரில் ஓட்டுனராக பணியாற்றிய காஜா மொய்தீன் கூட்டாளி இஜாஸ் பாஷாவை தமிழக கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் களியக்காவிளை சிறப்பு எஸ்ஐ வில்சன் படுகொலை குறித்து விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் வில்சன் கொலை தொடர்புள்ளவர்களாக கருதப் படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

முன்னதாக இவர்கள் இருவர் குறித்தும் துப்பு கொடுத்தால், ரூ. 7 லட்சம் சன்மானம் வழங்கப் படும் என்றெல்லாம் கன்னியாகுமரி போலீஸார் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

Related articles

Recent articles

spot_img