டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சரணடைந்த ஜெயக்குமாருக்கு பிப்.20 வரை காவல்!

Published:

13 July31 TNPSC - 2026

டி.என்.பி.எஸ்.சி. முறைக்கேட்டில் தனக்கு தொடர்பில்லை என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்த இடைத்தரகர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 மற்றும் குரூப் 2 முறைகேடு தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடி போலீஸார் வலை வீசி தேடி வந்தனர்.

இதனை தொடர்ந்து இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். சரணடைந்த ஜெயக்குமாரை பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவலில் வைக்கவுள்ளனர். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 முறைக்கேட்டில் தனக்கு தொடர்பில்லை என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஜெயக்குமாருக்கு நீதிமன்றக் காவல்!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த ஜெயக்குமாரை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img