
தில்லியில் நடந்து வரும் வன்முறை சம்பவத்தால் உயிரிழந்த காவலர் ரத்தன் லாலின் படத்தை வெளியிட்டு, இந்த மரணத்தை கண்டிக்காத எவரும் நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியில்லை என்று எச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்.
தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்துவந்த சூழலில், ஆதரவு தெரிவித்து பா.ஜ.க போராட்டத்தில் குதித்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைமைக் காவலர் ரத்தன் லால் உள்ளிட்ட மூன்று பேர் போலீசார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “முஸ்லீம் வன்முறையாளர்களால் இன்று தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பம் அனாதையாக்கப் பட்டுள்ளது. இதை கண்டிக்காத எவரும் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்” என்று கூறியுள்ளார்.
முஸ்லீம் வன்முறையாளர்களால் இன்று தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பம் அனாதையாக்கப் பட்டுள்ளது. இதை கண்டிக்காத எவரும் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள். pic.twitter.com/7HqcMoc3gI
— H Raja (@HRajaBJP) February 26, 2020



Leave a Reply