கொரோனா தாக்கம்… இந்தியாவில் முதல் உயிரிழப்பு?

இந்தியா பொது தகவல்கள்
corona affected died - 2026

கர்நாடகா மாநிலம் கல்புர்கி (குல்பர்க்கா)யைச் சேர்ந்தவர் முகமது உசைன் சித்திக் என்ற முதியவர். இவர், கொரோனாவினால் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தற்போதுதான் சௌதி அரபியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார். இங்கு வந்த போது அவருக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற தொந்தரவுகள் இருந்துள்ளது. .இந்நிலையில், இவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக சந்தேகம் எழுந்தது.

கொரோனோ தொற்று இருப்பதாக எழுந்த சந்தேகத்தில் ஐதராபாத்தில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் 76 வயதான முகமது உசைன் சித்திக். ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இருப்பினும் மற்றொரு தகவலில், இவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இவரது மாதிரிகள் சோதனைக் கூடத்துக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், இன்று மாலைதான் அது குறித்த ரிசல்ட் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது!

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.