bear
bear

பண்ணாரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கரடி உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.

இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாலையில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது.

இதனால், யானை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. நேற்று அதிகாலை பண்ணாரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய கரடியின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கரடிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

சாலையில் கரடி அடிபட்டு கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உடனடியாக மீட்டு காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே கரடி இறந்தது. இதையடுத்து, கரடி மீது மோதிய வாகனம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending