jumb sus
jumb sus

கர்நாடகத்தில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையின் 5ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்கொண்டார்.

கர்நாடகத்தில் உள்ள விக்டோரிய மருத்துவமனையில் கடந்த வெள்ளியன்று கடும் மூச்சு திணறல் காரணமாக ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அந்த நபர் இன்று காலை மருத்துவமனையின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்கொலை செய்துகொண்ட நபருக்கு சிறுநீரக கோளாறு பிரச்னையும் இருந்ததாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் மருத்துவமனையின் 5ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending