என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. உள்ளிட்ட மத்திய அரசு நிதியுதவியுடன் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ. பிரதான தேர்வு) நாடு முழுவதும் இன்று தொடங்க உள்ளது. சனிக்கிழமை எழுத்துத் தேர்வும், ஏப்ரல் 10,11-ஆம் தேதிகளில் இணைய வழித் தேர்வும் நடத்தப்பட உள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது. இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதலில் ஜே.இ.இ. பிரதான தேர்வும், பின்னர் ஜே.இ.இ. முதன்மைத் (அட்வான்ஸ்டு) தேர்வும் நடத்தப்படும். இதில் ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளில் சேர முடியும். ஜே.இ.இ. பிரதான தேர்வில் தகுதி பெற்று, அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளில் சேர முடியும். இப்போது 2015-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தேர்வின் எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடத்தப்படுகிறது. வரும் 10,11 தேதிகளில் இணையவழி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் இருந்து 13 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். இந்தத் தேர்வு முடிவு ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.ஜே.இ.இ.முதன்மைத் தேர்வு 24-5-2015 அன்று நடத்தப்பட உள்ளது. பிரதான தேர்வு தகுதிப் பட்டியலில் முதல் 1.50 லட்சம் பேர் மட்டுமே இந்த “அட்வான்ஸ்ட்” தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சினி நியூஸ்
திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!
பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.
சற்றுமுன்
கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சற்றுமுன்
வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.