கொரோனா: அறிகுறி இன்றி 5 விமானிகளுக்கு தொற்று!

இந்தியா பொது தகவல்கள்
flight 1

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது.

ஏர் இந்தியா விமான பைலட்டுகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறதது. இதில் ஏர் இந்தியா விமானத்தின் ஐந்து பைலட்டுகளும் தங்களது கடைசி பயணத்துக்குப் பின்பு, 20 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் 5 பைலட்டுகள் , ஒரு இஞ்ஜினியர் மற்றும் எர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 77 விமானிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது இவ்வாறாகத் தொற்று இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட 5 விமானிகளுக்கும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.