ediurappa - 2026

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

நாட்டில் மராட்டியம், குஜராத், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இந்த 4 மாநிலங்களை சேர்ந்தவர்கள், கர்நாடகத்திற்குள் வந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள். வருகிற 31-ந் தேதி வரை கர்நாடகத்திற்குள் நுழைய அவர்களுக்கு தடை விதித்து முடிவு செய்துள்ளோம். ஆனால் படிப்படியாக அனுமதிப்போம்.

மக்களின் நடமாட்டத்திற்கு அனுமதி அளிக்கும் நோக்கத்தில் கர்நாடகத்தில் பஸ்கள் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை(இன்று) காலை முதல் தொடங்கும். ரெயில்களை கர்நாடகத்திற்குள் இயக்கலாம். சலூன்கள், பல் மருத்துவ மையங்களை திறக்கலாம் என்று எடியூரப்பா கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending