08 May29  TN government 1

கொரோனா எதிரொலியாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடு செய்ய செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, சிக்கன நடவடிக்கையாக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சால்வைகள், பூங்கொத்துகள், நினைவுப் பரிசுகள் வழங்குவது உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும்.

அரசு செலவிலான விருந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அரசு அலுவலகங்களின் செலவினங்கள் குறைக்கப்படுகிறது.

மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலகத் தேவைகளை வாங்குவது 50% குறைக்கப்பட வேண்டும்

அதேபோன்று அரசு உயரதிகாரிகள் உயர் வகுப்பு விமானங்களில் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டணத்துக்கு இணையான தொகைக்கு மட்டுமே அவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

விளம்பரச் செலவுகளை 25% குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending