21 வயது பெண்ணுக்கு 13 வயது சிறுவன் கொடுத்த பாலியல் தொந்தரவு!

இந்தியா பொது தகவல்கள்
cell

இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் 21 வயது பெண்மணி வசித்து வருகிறார். இதே பகுதியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி சிறுவன் என்ற காமுகன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனின் மீது பெண்மணி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் வழங்கியுள்ளார்.

இது குறித்த புகாரில், நான் பி.எஸ்.சி பட்டம் பயின்றுள்ளேன், சமூக ஆர்வலர். நான் எனது அலைபேசி மூலமாக இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய நிலையில், ஒரு குழுவில் இணைந்தேன். இந்த குழுவில் நான் வசிக்கும் பகுதியை சார்ந்த ஆறாம் வகுப்பு பயிலும் சிறுவன் இருக்கிறான்.

அந்த குழுவில் கடந்த 7 ஆம் தேதி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். அந்த சிறுவனை எனக்கு தெரியும் என்பதால், நான் இயல்பாக பேசி வந்தேன். இந்நிலையில், எனது புகைப்படங்களை எனக்கே தெரியாமல் சேகரித்து, புகைப்படத்தை மாபிங் செய்து வெளியிடுவேன் என்று மிரட்டினான்.

மேலும், தன்னுடன் பாலியல் ரீதியாக பேச வேண்டும் என்றும், தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் நாளடைவில் மிரட்ட துவங்கினான், சிறுவனின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 13 வயது சிறுவனின் செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.