train services 1
train services 1

இந்தியா முழுவதும் ஊரடங்கு காரணமாக இரயில் சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் முற்றிலும் இரத்து செய்யப்பட்டது. இதனால் முன்னதாகவே பயணம் செய்ய முடிவு செய்து, முன்பதிவு செய்த பலரும் முன்பதிவு தொகைகள் மீண்டும் வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பயணிகள் முன்பதிவு செய்த இரயில் பயணசீட்டிற்கான கட்டண தொகை பயணிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், இரயில் பயணசீட்டிற்கான கட்டண தொகையை திரும்பி பெறுவதற்கான மையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, மாம்பலம், திருமயிலை, பரங்கிமலை, தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், ஆவடி, திருவள்ளூர், காட்பாடி, ஆம்பூர் மற்றும் குடியாத்தம் ஆகிய மையங்களில் கட்டணத்தை திரும்ப பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending