ரூ.20 லட்சத்திற்கும் மேல் எடுக்கப்படும் பணத்திற்கு கூடுதல் டிடிஎஸ் வரி! வருமான வரித்துறை!

இந்தியா சற்றுமுன் வணிகம்
bank post

வங்கி மற்றும் தபால் நிலையங்களில் இருந்து ரூ. 20 லட்சத்திற்கும் மேல் எடுக்கப்படும் பணத்திற்கு கூடுதல் டிடிஎஸ் வரி செலுத்த வேண்டிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய நடைமுறையின் படி, வருமான வரி செலுத்தாத நபராக இருந்தால், தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் வரை மட்டுமே எந்தவித வரி பிடித்தமும் இல்லாமல் பெற முடியும்.

ரூ. 20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் எடுத்தால் 2%மும் ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 5%மும் வரி பிடித்தம் செய்யப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

அதே வேளையில் வருமான வரி செலுத்தும் வாடிக்கையாளராக இருந்து, தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி வரை பணம் எடுத்தால் எந்த வித வரி பிடித்தமும் செய்யப்படாது.

ஒரு கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 2%வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த புதிய நடைமுறை மூலம் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது, அவர்களது பான் நம்பர் பதிவு செய்யப்படும்.

ALSO READ:  செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!

அப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகைக்கு மேல் பணம் எடுத்தால், தானாகவே வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.