அசாமில் கனமழை: 27.64 லட்சம் மக்கள் பாதிப்பு!

இந்தியா சற்றுமுன்
assam

அசாமில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாமிலுள்ள 26 மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வெள்ள பாதிப்புக்கு அசாமில் இதுவரை 105 பேர் உயிரிழந்து உள்ளனர். 27.64 லட்சம் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளத்தில் இருந்து 511 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.