அதிகரிக்கும் கொரோனா: செப்டம்பரில் பாதிப்பு 35 லட்சமாக உயரும்: ஐ.ஐ.எஸ்.சி!

india-corona

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தற்போதைய நிலை நீடித்தால் செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என பெங்களூருவில் இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐ.ஐ.சி.எஸ் நிறுவனத்தின் பேராசிரியர்கள் ஜி.சசிக்குமார், தீபக் ஆகியோரின் குழுவினர் தற்போது நாட்டில் மாநிலந்தோறும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தும், எதிர்காலத்தில் பரிசோதனையை அதிகப்படுத்தினால் இருக்கும் நிலை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், நாட்டில் கொரோனாவுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும். இவர்களில் கர்நாடகத்தில் மட்டும் 71,300 பேர் சிகிச்சையில் இருப்பார்கள். இப்போது தொடரும் நிலையைவிட முன்னேற்றம் காணப்பட்டால் செப்டம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 4.5 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். 88 ஆயிரம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும், நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையைவிட மோசமாக மாறினால், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்தால், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6.30 லட்சம், தில்லியில் 2.40 லட்சம், தமிழகத்தில் 1.60 லட்சம், குஜராத்தில் 1.80 லட்சம் அதிகரிக்கலாம்.

நவம்பர் 1-ம் தேதிக்குள் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 7.20 லட்சமாக அதிகரிக்கும், 30,400 பேர் உயிரிழக்க நேரிடும் என்றும், 2021-ஆம்ஆண்டு ஜனவரிக்குள் 10.80 லட்சம் பேர் பாதிக்கப்படலாம், அதில் 78,900 பேர் உயிரிழக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக உயிரிழப்பைப் பொறுத்தவரை செப்டம்பர் மாதத்துக்குள் 1.40 லட்சமாக அதிகரிக்கலாம். இதில் மகாராஷ்டிராவில் 25 ஆயிரம் பேர், தில்லியில் 9,700 பேரும் , கர்நாடகாவில் 8,500 பேரும், தமிழகத்தில் 6,300 பேரும்,குஜராத்தில் 7,300 பேரும் உயிரிழக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா இந்தியாவிலும் உலகின் பிறபகுதிகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நோயைக் கட்டுப்படுத்த இந்திய அரசு முயற்சித்த போதிலும், 640 மாவட்டங்களில் 627 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, தில்லி, தமிழ்நாடு, குஜராத், இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மற்றும் மத்தியப் பிரதேசம் என இந்த எட்டு மாநிலங்களில், ஐந்து மாநிலங்களில் அதிக ஒட்டுமொத்த பாதிப்பு உள்ளது. பீகார், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் குஜராத் ஆகிய ஒன்பது பெரிய மாநிலங்களில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories