அதிக மின்கட்டண வசூல்: மின்சார ஊழியர்களை கம்பத்தில் கட்டிய மக்கள்!

Published:

eb-wokers

தெலங்கானாவில் அதிக மின்சார கட்டணத்தை அட்டையில் குறித்துவிட்டுச் சென்ற மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து வாக்குவாதம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் முஸ்லாபூர் கிராமம் அமைந்துள்ளது. அதிக மின்கட்டணம் வசூலிப்பதால் இங்குள்ள பொதுமக்கள் ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அதிக மின்சார கட்டணத்தை அட்டையில் குறித்துவிட்டுச் சென்ற மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்தனர்.

தமது கிராமத்தில் அடிக்கடி மின் விநியோகம் தடைபடுவதாகவும், அப்படியிருந்தும் ஊரடங்கு காலத்தில் வழக்கத்தைவிட மின் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்படுவதாகவும் கூறி வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்து வந்த மின்வாரிய உயரதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு மின் ஊழியர்களையும் மீட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img