நாளை முதல்… கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் பதிவு!

கல்வி தமிழகம்
admissions

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ஆம் தேதி வெளியானது. இதனால், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர சேர்க்கைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடக்கி விட்டது.

இந்நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை நாளை முதல் ஆன்லைன் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள 109 கல்லூரிகளுக்கும், 139 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளுக்கும், 571 தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு நாளை முதல் மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

நாளை முதல் இந்த மாதம் 31-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக மாணவர்கள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரி இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.