தென் கிழக்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.
இந்திய ரயில்வே துறையின் கீழ் தென் கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து அதன் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் தென் கிழக்கு ரயில்வே மண்டலத்தில் Act Apprentice பணிக்கு என 1785 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அரசு பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Apprentice விதிமுறைகள் படி சம்பளம் அல்லது உதவித்தொகை வழங்கப்படும். பதிவு செய்வோர் தங்களின் மதிப்பெண்களின் அடிப்பைடையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிக்கு விண்ணப்ப கட்டணமாக பொது விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும் மற்ற வகுப்பினர் கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை. தகுதியானவர்கள் 14.12.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Apply Link: South Eastern Railway (rrcser.co.in)