
உடல் அரிப்பு சரியாக…
அரை ரூபா எடை நீரடி முத்து, அரை ரூபாயெடை கசகசா, அரை ரூபாயெடை கருஞ்சீரகம் ஆகியவற்றை அம்மியில் வைத்து நன்கு மை போல் அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் ஊற வைத்து ஒரு வாரம் குளித்து வரஉடல் அரிப்பு மறுபடி வரவே வராது.
வண்டு கடிக்கு…
பப்பாளியிலையை கசக்கி சாறெடுத்து கடிவாயில் கனமாக மூன்று நாள்கள் தடவி வர பூரண குணமாகும்.
பூனை கடிக்கு…
மஞ்சள், சுண்ணாம்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து கடிவாயில் கனமாக பூசி விட விஷம் முறிந்து விடும்.
பூரான் கடிக்கு…
சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து கடித்த இடத்தில் சிறிது நேரம் தேய்த்துக் கொண்டே இருந்தால் பூரான் விஷம் முறிந்து விடும்.
நாய்க் கடிக்கு…
நாயின் வால் கீழ்நோக்கிச் சென்று வயிற்றுடன் ஒட்டி இருக்குமானால் அது வெறிநாய். நாயின் வால் நிமிர்ந்து இருந்தால் அது வெறி நாயல்ல. சாதாரண நாய். சாதாரண நாய்க் கடிக்கு நாயுருவிச் சாற்றில் சம அளவு சுண்ணாம்பு சேர்த்துக் குழப்பி கடிவாயில் மூன்று நாள் கட்டி வந்தால் நாய் விஷம் சரியாகும்.
குப்பைமேனிச் சாற்றில் அதே அளவு சுண்ணாம்பு சேர்த்துக் குழைத்து கடிவாயில் வைத்து மூன்று நாள் கட்டினாலும் குணமாகும்.