
ஸ்மார்ட்போன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடல் தான் சியோமி நிறுவனத்தின் அடுத்து வரவிருக்கும் சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள். இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகிய நேரத்தில் இருந்து இதன் வருகைக்காக ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.
ஸ்மார்ட்போன் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் சியோமி 12 இன் வருகை
இப்போது சியோமி தயாரிப்பில் உருவாக்கி வெளிவரக் காத்திருக்கும் புதிய சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போனின் சரியான அறிமுக தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi தனது பட்டியலில் சியோமி 12 என்ற மாடல் பெயர் உடன் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் சாதனம் குறித்த பல தகவல்களை இப்போது வெளியிட்டுள்ளது.
Xiaomi மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான தகவல் தயாரிப்பாளர்களிடமிருந்து தான் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
சமீபத்திய கசிவுகள் படி, ஸியோமியின் புதிய சியோமி 12 சாதனம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய Xiaomi 12 ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 898 இல் இயங்கக்கூடும் என்று கடந்த காலங்களில் வெளியான ஒரு முக்கிய தகவல் நம்பகமான டிப்ஸ்டர் வழியாக வெளிப்பட்டது.
இது Qualcomm இன் மிக சமீபத்திய சிப்செட் மாடல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியான தகவலின் படி, சியோமி தயாரிப்பாளர்கள் Xiaomi 12 ஸ்மார்ட்போன் உடன் Xiaomi 12X என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் நடுப்பகுதியில் சீனாவில் நடக்கும் ஷாப்பிங் திருவிழாக்களுடன் இந்த சாதனம் ஒத்துப்போகிறது என்பதை மனதில் வைத்து வரும் டிசம்பர் 12 ஆம் தேதி இந்த சாதனத்தை நிறுவனம் வெளியிடுவதற்குப் பொருத்தமான தேதியாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Qualcomm இன்னும் அதன் வரவிருக்கும் சக்திவாய்ந்த சிப்செட் Snapdragon 898 ஐ அறிமுகப்படுத்த உள்ளது. அறிக்கைகளின் படி, Xiaomi 12 ஸ்மார்ட்போன் Snapdragon SM8450 இல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது Snapdragon 898 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Xiaomi 12 ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி பின்பக்க கேமராவைக் கொண்டிருக்கக் கூடும் என்றும் மேலும் வதந்திகள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன என்றும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.
சாதனம் 50 எம்பி சாம்சங் ஜிஎன்5 பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சாதனம் 200 எம்பி ஸ்னாப்பரைக் கொண்டிருக்கவும் ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.
முதன்மை கேமராவுடன், மூன்று கூடுதல் 48 எம்பி கேமராக்கள் 2x, 5x மற்றும் 10x ஜூம் திறன் கொண்ட சாதனத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi 12 இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரையும் கொண்டுள்ளது.
மறுபுறம், சியோமி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யும் Xiaomi 12X ஸ்மார்ட்போன் மாடலும் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி அன்று Xiaomi 12 ஸ்மார்ட்போன் உடன் உற்பத்தியாளர்களால் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சியோமி 12 எக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்திடம் இருந்து இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் மற்றொரு ஸ்மார்ட்போன் சாதனமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சியோமி 12X ஸ்மார்ட்போன் மாடலில் 6.28′ இன்ச் கொண்ட 1,080 x 2,400 பிக்சல்கள் உடைய OLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சியோமி 12x ஸ்மார்ட்போன் சாதனம் Snapdragon 870 சிப்செட் இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சியோமி 12X ஸ்மார்ட்போன் நிறுவனத்தால் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட சியோமி Mi 11X இன் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இது உண்மையில் Mi 11X ஸ்மார்ட்போனின் வாரிசா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த சாதனத்தில் உள்ள கேமரா அமைப்பு 50MP கேமராவுடன், முன்புறத்தில் 20MP செல்ஃபி கேமராவுடன் இருக்கும் என ஊகிக்கப்படுகிறது.
புதிய சியோமி 12X ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என்றும், இது 33W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 67W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிக்கைகள் உண்மையாக இருந்தால் மற்றும் Snapdragon 898 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்றால், Qualcomm செயலிகளை இவ்வளவு பெரிய அளவில் அறிமுகப்படுத்துவது செயலியின் ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
ஸ்னாப்டிராகன் செயலிகள் அதன் முக்கிய போட்டியாளரான எக்ஸினோஸ் சிப் மாறுபாடுகளை விட ஒட்டுமொத்த செயல்திறன், பேட்டரி ஆயுள் மற்றும் வெப்பக் கட்டுப்பாடு என்று வரும்போது எப்போதும் இது சிறப்பாக இருக்கும்.